Spread the love

நாகப்பட்டினம் அக், 8

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வன உயிரின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வேதாரண்யம் வனச்சரகத்தில் வனத்துறை பணியாளர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் வன உயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் அறிவுரையின்படி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் சூழல் மேம்பாட்டு குழுவினர், மற்றும் பள்ளி மாணவர்கள், வனத்துறை அனைத்து நிலை பணியாளர்கள் கோடியக்கரை சித்தர் கோவில் கடற்கரை பகுதியில் குப்பைகளை தூய்மைப்படுத்தினர். இந்த பணி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *