நெல்லை அக், 10
மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர் 10ம் தேதி கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலப் பிரிவு சார்பாக உலக மனநல தின கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. நிறைவுநாளான இன்று, கல்லூரி முதல்வர் மருத்துவர். ரவிச்சந்திரன் தலைமையில், உதவி முதல்வர் டாக்டர் சாந்தாராம், மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை காவல் ஆணையர் சீனி வாசன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு, மனநல ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள், மருத்துவ பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் மனநல ஆரோக்கியம் குறித்த பதாதைகளை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை கூறியும் சென்றனர்.
பேரணியின் முடிவில் மனநலத்தை முன்னிறுத்துவோம் என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
முன்னதாக, மனநலப் பிரிவு பேராசிரியர் மருத்துவர் ராமானுஜம் வரவேற்புரை ஆற்றினார். இளநிலை மருத்துவ பயிற்சி மாணவர்களிடையே நடந்த மனநலம் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கும், செவிலியர் பயிற்சி மாணவிகளிடையே நடைபெற்ற பாதை மற்றும் போதை தலைப்பில் நடந்த ஓவிய போட்டியிலும், மனநலத்தை முன்னிறுத்துவோம் என்கிற தலைப்பில் நடந்த கட்டுரைப் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டன.
