சென்னை அக், 10
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிறுவனத்தினை (LCNG Station) காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தின் புதிய கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். சிப்காட் நிறுவனம் – பிரிட்டிஷ் துணை தூதரகம் இடையே “நகர்திறன் பூங்கா” அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றப்படுகிறது. மேலும் சிப்காட் நிறுவனம் – அண்ணா பல்கலைக்கழகம் இடையே “மருத்துவ உபகரணங்கள் பூங்கா” அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றப்படுகிறது மற்றும் சிப்காட் நிறுவனத்தின் ஈவுத் தொகை (Dividend) முதலமைச்சரிடம் வழங்கப்படுகிறது.