கோயம்புத்தூர் அக், 10
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ம்தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்பட ஏராளமானோர் விசாரிக்கப்பட்டனர். இந்தநிலையில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை தொடங்க உள்ள நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.