கோயம்புத்தூர் அக், 8
கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பழைய குப்பைகளை தரம் பிரிக்கும் இடம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் இடம், உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அவர், நேற்று ஒண்டிப்புதூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.