மயிலாடுதுறை அக், 8
கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருகாவூர், வடகால், எட மணல் ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகள், கிராம சாலை, மின்சாரம், குடிநீர் குறித்து வளர்ச்சி பணிகளையும், ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணியையும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இந்த ஆய்வின்போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், பூரண சந்திரன், தாரா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிமளா செல்வராஜ், சத்யா உதயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகன்யா, பிரேம்குமார், பணி மேற்பார்வையாளர் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.