ஈரோடு அக், 8
பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி நடக்கிறது. தபால் தலை இந்திய அஞ்சல் துறை, தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி’ நடத்துகிறது.
அனைத்து மத்திய, மாநில அரசு பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். வருகிற 31 ம்தேதிக்குள் தங்கள் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவியருக்குள் போட்டி நடத்த வேண்டும். அதில் சிறந்த, 5 படைப்பை தேர்வு செய்து, ஸ்கேன் செய்து, www.innovativeindia.mygov.in/akamstampdesign என்ற போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் சிறந்த படைப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து, 5 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளிக்கூடங்கள் எத்தனை மாணவர்கள் பங்கேற்கிறார்கள் என்ற விபரத்தை, அஞ்சல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான வரைபட தாளை அஞ்சல் துறை வழங்கும். இந்த தாளில் கிரேயான்கள், பென்சில் வண்ணம், நீர் வண்ணம், அக்ரலிக் வண்ணங்கள் மூலம் ‘எ.கே.எ.எம்.’ என்ற தலைப்பில் வரைய வேண்டும். எ.கே.எ.எம். என்ற தலைப்பு, 5 உப தலைப்புகளை கொண்டது. மேற்கண்ட தகவலை, ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது