சென்னை அக், 7
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வருகிற அக்டோபர் 17ல் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது சட்டமாக இயற்றப்பட உள்ளது.
மேலும் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறைத்தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பாக விளம்பரம் செய்தால் அந்த நிறுவனங்களை நடத்தும் நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.