தர்மபுரி அக், 6
பாப்பாரப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அங்குள்ள சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி, அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்கள், மணி, அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பால்வள தலைவர் அன்பழகன் ஆகியோரும் தியாகி சுப்பிரமணிய சிவாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.