ஈரோடு அக், 4
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினர் திருமகன், சட்ட மன்ற உறுப்பினர் ஈவெரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்ந்த 3 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சான்றிதழ்களும், 5 பேருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் மற்றும் பள்ளிக்கூட மாணவ, மாணவிர்களுக்கு இடையே நடைபெற்ற ஓவியபோட்டியில் வெற்றிபெற்ற 3 மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மணி, இணை இயக்குனர் பிரேமகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.