அரியலூர் அக், 3
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, துணை ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தா.பழூர் அருகே உள்ள சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை என்பவர் மதுபாட்டில்களை பதுங்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் அதேபோல் அந்த தெருவை சேர்ந்த செல்வம், அதே பகுதியை சேர்ந்த முத்து, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரஸ்வதி, அதே பகுதியை சேர்ந்த செல்வி ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.