மயிலாடுதுறை ஆகஸ்ட், 3
மயிலாடுதுறை பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி வழங்கப்படுகிறது என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடன் உதவி மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் தகுதியின் அடிப்படையில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
இதற்காக லோன் மேளா நடைபெற உள்ளது. விண்ணப்பம் இந்த லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் நேற்று முதல் 15.8.2022 வரை நடைபெறுகிறது. மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் லோன் மேளா கடந்த 1.8.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறும்.
இந்த திட்டம் மூலம் பயன்பெற விரும்புவோர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது