தேனி அக், 3
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை சார்பில் வலிமையான சுதந்திர இந்தியா குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடந்தது. இந்த தொடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தொடங்கி வைத்தார். இதில் மாணவர், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். விளையாட்டு அரங்கில் தொடங்கிய விழிப்புணர்வு ஓட்டம் கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், நேரு யுவகேந்திரா திட்ட மேற்பார்வையாளர் ஸ்ரீராம்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.