சேலம் அக், 1
தொடர் விடுமுறை இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற 4 ம்தேதியும், சரஸ்வதி பூஜை 5 ம்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் வருகிற 3 ம்தேதி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிற்றுக்கிழமை சேர்த்து அவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை ஆகும்.
மேலும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை அவரவர் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். இதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சேலம், ஆத்தூர் உள்ளிட்ட அவரவர் சொந்த ஊர்களுக்கு வரத்தொடங்கி உள்ளனர். மேலும் சேலத்தில் வேலை பார்க்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று மாலை புறப்பட்டனர். இதனால் நேற்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.