சென்னை செப், 30
பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார் , விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், உள்ளிட்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. வர்த்தக ஆதாரங்களின் தகவல் படி பொன்னியின் செல்வன் இன்று கிட்டத்தட்ட ரூ.17 கோடிக்கு முன்பதிவு செய்துள்ளனர். படத்திற்கு முதல் நாள் உலகளவில் ரூ.50-60 கோடி வசூல் செய்துள்ளது, இது இந்த வருடத்தில் எந்த தமிழ் படமும் செய்யாத அதிகபட்ச வசூலாகும்.