திருவண்ணாமலை செப், 30
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு, கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் இ-ஸ்ரம் மாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவற்றின் கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி முன்னிலை வகித்தார்.
அதைத்தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறியும் நேர்வில் ஏற்படும் சிரமங்கள் குறித்து குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்தார். கூட்டத்தில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்கள், பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.