திருவண்ணாமலை செப், 28
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்துகொண்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை விநியோக வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் ராஜாகுமார், துணை பதிவாளர் சந்திரசேகர ராஜா, ஒன்றிய பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.