நெல்லை செப், 30
வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கையை முன்னிட்டு பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் ஆசிரியை மரியரூயஅபராணி வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் எலிசபெத் மாணவர்களின் கற்றல்திறன் வளர்ச்சிக் குறித்தும், பள்ளியின் சிறப்பு அம்சங்களின் விரிவாக்கம் குறித்தும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார். மேலும் பள்ளியின் தாளாளர் ஜெகதீஸ் விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் குறித்து தெரிவித்து பேசினார். வருகிற 4 மற்றும் 5 ம்தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என தகவல் தெரிவித்தார்.