கோவை ஆகஸ்ட், 2
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது.
பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கவில்லை. ஒரு அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் இந்த தடைகளை நீக்க வேண்டும். ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் சிலைகள் வைக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால் கோவை தெலுங்குபாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிளில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் புதிய வடிவிலான விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சிலைகள் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சிறிய அளவில் களிமண்ணால் செய்த சிலைகள் ரூ.250, காகித கூழில் செய்த சிலைகள் ரூ.50க்கும் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிலைகள் அனைத்தும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டு வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
#Vanakambharatham#Ganeshchaturthi#news