Spread the love

ஈரோடு செப், 23

பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, ஈரோடு மீனாட்சிசுந்தரனார் ரோட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த சுமார் 30 ஆண்டு கால பழமை வாய்ந்த வேப்ப மரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் எந்தவித அனுமதியும் இன்றி வெட்டிவிட்டனர். மேலும் அந்த இடத்தில் கட்டுமான பணியும் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அங்கு கட்டுமான பணி மேற்கொண்டதும், மரத்தை வெட்டியதும் குற்றவியல் நடவடிக்கைக்கு சமம். எனவே சம்பந்தப்பட்ட சி.எஸ்.ஐ. நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

முன்னதாக பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் ஈரோடு சம்பத் நகரில் ஒன்றுகூடி அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *