புதுச்சேரி செப், 22
காரைக்கால் புதுச்சேரி அரசின் நிறுவனமான பிப்மேட் எனும் அமைப்பின் கீழ் காரைக்காலில் 2-ம், புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு பாலிடெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவை வைத்தே சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதைக்கண்டித்தும், மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்கக்கோரியும் காரைக்காலில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி விரிவுரையாளர் மற்றும் ஊழியர் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விரிவுரையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.