திருச்சி செப், 21
சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி சபரி நகரில் 65 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால் அதற்கு குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை.
எனவே குடியிருப்பு உரிமம் வழங்க கோரி திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 1996ம் ஆண்டு சோமரசம்பேட்டையில் உள்ள நாச்சிக்குறிச்சி சபரி நகரில் எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது, இதுநாள் வரை குடியிருப்பு உரிமம் வழங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.