செங்கல்பட்டு செப், 20
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் கரூர் வைசியா ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் சத்தம் கேட்க தொடங்கியதை தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினருக்கு பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா துணை ஆய்வாளர் சங்கர் தலைமையிலான காவல்துறையினர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குற்றவாளியின் தடயங்களையும் சேகரித்து சென்றனர்.