நெல்லை செப், 20
தேசிய மருந்துகள் எதிர்விளைவு கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 17 ம்தேதி முதல் 23 ம்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை அரசு சித்தமருத்துவமனை சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
பேரணியை கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கவிதா, அப்துல் காதர் ஜெய்லானி, மருந்தாளுநர்கள், சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பேரணியில் மருந்து மாத்திரைகளின் முக்கியத்துவம் குறித்தும் அது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். சித்த மருத்துவமனை முன்பு இருந்து தொடங்கிய பேரணி எல்ஐசி அலுவலகம், வஉசி மைதானம் பின்புறம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது. பேரணியையொட்டி போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மேற்பார்வையில் துணை ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் காவல் துறையினர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
