Spread the love

சென்னை ஆகஸ்ட், 2

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் தற்போது முதற்கட்டமாக 100 நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 91 ஸ்கார்பியோ வாகனங்களும், ஆணையர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் ஆகியோரின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 96 பொலிரோ வாகனங்களும் என மொத்தம் ரூ.23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 187 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது.

மேலும், அப்புதிய வாகனங்களுக்கான சாவிகளை நகரமன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#Vanakambharatham#MKstalin#news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *