கோயம்புத்தூர் செப், 18
தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா அதிமுக. சார்பில் கோவை ஹூசூர் ரோட்டில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், செல்வராஜ், கந்தசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி அதிமுக. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பெரியார் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.