கோயம்புத்தூர் செப், 17
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தார். அவர், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திக், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன், மாரிசெல்வம், திமுக பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.