சென்னை செப், 17
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா உள்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வாரிசு படத்தில் விஜய்யின் நண்பரான நடிகர் ஸ்ரீமனும் இணைந்து இருக்கிறார்.
அதோடு, ‛‛வாரிசு படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. விஜய் படம் என்றால் ஒரு போதும் தவறவிட மாட்டேன். தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குனர் வம்சி மற்றும் என் ஆரூயிர் நண்பர் விஜிமாவிற்கு நன்றி. நீ தந்த ஆதரவை என்றும் மறக்கமாட்டேன். லவ் யூ விஜிமா” என தெரிவித்துள்ளார்.