கன்னியாகுமரி ஆகஸ்ட், 1
தமிழகத்தில் தற்போது வானிலை ஆனது மிகவும் தீவிரமாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கிறது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அரக்கோணம் பகுதியில் இருந்து நீலகிரி, குமரி மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வரை கனமழை கொட்டி தீர்க்கிறது. இதன் காரணமாக நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அதிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
#Vanakambharatham#Heavyrain#schoolholiday#news