நெல்லை ஆகஸ்ட், 1
நெல்லை மாவட்டம், திசையன்விளை காமராஜர் சிலை அருகே மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள் தமிழ்நாடு காமராஜர்-சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் அனுசரக்கப்பட்டது. சசி பெருமாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுவினால் பெண்கள் விதவையாவதை குறிப்பிடும் வகையில் தாலி கட்டிய மது பாட்டில்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவாஜி முத்துக்குமார் மதுவை கீழை கொட்டியவாறு மதுவிற்கு எதிராகவும், காந்தி, காமராஜர் சசிபெருமாளை போற்றி கோஷங்கள் எழுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், மதுவிலக்கு போராளி சசிபெருமாளுக்கு சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் அல்பரட், ஆனைகுடி ஜெயபாண்டி, மன்னார்புரம் மார்ட்டின், பெப்பின் பீட்டர், ரூபன், சுந்தர், கல்லூரி மாணவி வைஷ்ணவி, உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்கள் காமராஜர் படம் போட்ட முகமூடி அணிந்து நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தி:
திரு.ஜான் பீட்டர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர்.