தென்காசி ஆகஸ்ட், 1
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஆடிதபசு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தார். அப்போது அவருக்கு கேடிசி நகர் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், ‘நெல்லையில் எங்களுக்கு எப்போதும் போல அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தான் தொடர்ந்து அதிமுக உறுப்பினராகவே செயல்பட்டு வருகிறேன்; அதுதான் உண்மை. தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு எங்கள் தலைமை அலுவலகத்திற்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அதனடிப்படையில் தான் ஓ.பன்னீர்செல்வம், கோவை செல்வராஜ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
#Vanakambharatham#OPRavindranath#news