செங்கல்பட்டு செப், 15
விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காண கட்டுபாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து நேரில் வருவதை தவிர்த்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண்: 18005993540, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-26421663, 044-26421665 மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-27427412; 044-27427414 மற்றும் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப் எண்: 9444272345 போன்றவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கூறியுள்ளார்.