Spread the love

அரியலூர் செப், 15

தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் அரியலூர் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்து கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி உரிமத்தினை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை வருகிற 30 ம்தேதிக்குள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலத்தினை குறிக்கும் புல வரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புற தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் புல வரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் எனில் உரிமையாளர் வீட்டு வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு/குடும்ப அட்டை /வாக்காளர் அடையாள அட்டை) ஆகிய வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் வெடிபொருள் விதிகள் 2008-ன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், மாவட்டங்களில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *