தூத்துக்குடி செப், 14
தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். துண்டு பிரசுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி பாளையங்கோட்டை ரோடு, குரூஸ்பர்னாந்து சிலை, பாலவிநாயகர் கோவில் தெரு வழியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
இந்த பேரணியில் பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். அதே போன்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர்.