கோயம்புத்தூர் செப், 14
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மலர்களின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையின் அழகிய மலர்ப்பாதங்களில் உள்ள கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. செயற்கை அருவிகள் மிதவெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட இப் பண்ணையில் பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள், மலேசியாவை தாயகமாகக் கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்புட்டான், இலவங்கப்பட்டை, எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள் பலா ஆகிய பல்வேறு வகையான பழ மரங்கள் வாசனை திரவிய பயிர்கள், அலங்காரச் செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்சோரா, அரிக்கா பனை, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் யானைகள் வழித்தடமான கல்லாறு மற்றும் யானைகள் சாலையை கடந்து செல்லும் கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.
மேலும் யானைகள் வழித்தடத்தில் உள்ள கல்லாறு பகுதியில் பல அதிரடி நடவடிக்கைகளுக்கான உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கி வருகிறது. இதன் முதல் கட்டமாக யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையை மூடிவிடவும், பழ பண்ணை இருக்கும் இடத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது