சென்னை செப், 13
கூடன்குளத்தில் அணுமின்நிலையத்தில் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் திறக்கப்பட்டது.
இதனை பி.எம்.எஸ் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ்ஜி திறந்து வைத்தார். மாநில துணை தலைவி கிரிஜாஜி குத்துவிளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அரிமுத்தரசு தலைவர் தனராஜ் செயலாளர் முருகன், பொருளாளர் பிரவணவன், ராஜலிங்கம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அணுமின் நிலையம் ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.