கரூர் ஆகஸ்ட், 1
கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் வெங்கமேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி கோட்டத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சரவணன், பொருளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சக்தி வரவேற்புரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடுவது, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#Vanakambharatham #consultationmeeting #celebrating #ganeshachaturthi #news