சென்னை செப், 11
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தற்போது பயங்கர பிஸியாக RC15 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்பட்னக்கள் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார்.
இதில் அவர் முதலில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு ராம் சரணின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படங்கள் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் ஷங்கர் வேள்பாரி என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க இருப்பதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வந்தன. மேலும் தற்போது அப்படத்தை தயாரிக்கவுள்ள நிறுவனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அப்படத்தை Netfilx மற்றும் கரண் ஜோகர் இணைந்து தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படத்தில் கே.ஜி.எப் பட புகழ் நடிகர் யஷ் கதாநாயகனாக நடிப்பார் என்றும் சமீபத்தில் இயக்குநர் ஷங்கரை யஷ் சந்தித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.