சென்னை செப், 10
கபிலன் மகள் தூரிகை
எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். இதேபோன்று முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. Being Women என்ற பெண்களுக்கான ஆங்கில இதழின் நிறுவன ஆசிரியராக தூரிகை பணியாற்றி வந்தார். இதன் முதல் பதிப்பை கடந்த 2020 செப்டம்பர் மாதம் இயக்குனர் ரஞ்சித், சேரன், நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்