சிவகங்கை செப், 11
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள வி.எஸ். சிவலிங்கம் செட்டியார் அரசு கல்லூரியில் பொன் விழா ஆண்டு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிவலிங்கம் செட்டியார் உருவ சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.
இவ்விழாவில் மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம், பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், நல்லம்மை அபிராமி ராமநாதன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடசேன், கல்லூரி முதல்வர் முத்துச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.