சென்னை செப், 11
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது.இலவச வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுவரை 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று 36-வது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், மாவட்ட மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த காலக்கெடு வருகிற 30 ம்தேதியுடன் முடிகிறது.