சென்னை செப், 10
பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கான திறந்த வெளியில் சுதந்திரமாக விளையாடி மகிழ வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நாளை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் 6.00 மணி முதல் 9.00 மணி வரை வீதி விழா கொண்டாட்ட அழைப்பை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விழாவில் பூப்பந்து, சைக்கிள் சவாரி, டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கயிறு இழுத்தல், உடற்தகுதி போட்டி மற்றும் வெளியறங்கு விளையாட்டுகளுக்கு போக்குவரத்து இல்லாத சாலையை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
“மகிழ்ச்சி உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளது மேலும் ஒரு கொண்டாட்ட அழைப்பு பொதுமக்களுக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டாடுங்கள்” என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.