காஞ்சிபுரம் செப், 10
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இந்த வாகனங்களின் போக்குவரத்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. எனவே பகுதியை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.