திருப்பத்தூர் செப், 9
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.