திருவனந்தபுரம் செப், 9
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணப்பண்டிகை சிறப்பு வழிபாடுகளுக்காக கோவில் நடை கடந்த 6 ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று ஓணப்பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஓண விருந்தும் வழங்கப்பட்டது.
ஓணப்பண்டிகை முடிவடைந்ததை தொடர்ந்து நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 16 ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது