சென்னை செப், 6
கம்போடியா நாட்டில் வருகின்ற 2022 செப்டம்பர் 28 ம் தேதி முதல் அக்டோபர் 3 வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம், அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம் மற்றும் கலாச்சாரம் நுண்கலை அமைச்சகம் இணைந்து நடத்தும் உலகத் திருக்குறள் மாநாடு -2022 நடக்கிறது. வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் கமெர் மொழி திருக்குறள் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.
இவ்விழாவில், கம்போடியா நாட்டின் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
மேலும் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக பல்வேறு தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டு ரைகள் சமர்ப்பித்தல், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், ஆய்வரங்கம், கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டின் ஏற்பாடுகளை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சந்தோசம், கம்போடியா அங்கோவாட் தமிழ்ச் சங்க தலைவர் திரு.சீனிவாசராவ், துணைத்தலைவர் திரு.ம. ரமேஷ்வரன், முனைவர் உலகநாயகி பழனி, பேராசிரியர் வணங்காமுடி, கவிஞர் அப்துல்காதா் ஆகியோர் செய்து வருகின்றனர்.