தூத்துக்குடி செப், 5
கயத்தாறில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழுக்கள் மூலம் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு முன் பணம் கட்டவேண்டும், ரூ.1 லட்சம் கடன்பெற ரூ.32ஆயிரம் முன்பணம் கட்டவேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் கூறியுள்ளார். இதை நம்பி கயத்தாறில் ஏராளமான பெண்கள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். இந்த வகையில் ரூ. 21லட்சம் வரை வசூல் செய்து விட்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மோசடி செய்த பணத்தை மீட்டு தரக்கோரியும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வட்டாட்சியர் சுப்புலட்சுமி கயத்தாறு கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சாலமோன் ராஜ் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.