Spread the love

தூத்துக்குடி செப், 3

அதிமுக. பொதுக்குழு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், தூத்துக்குடியில் அதிமுக.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் இருநீதிபதிகள் அமர்வு, முந்தைய தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லும் என்ற தீர்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம், சிவன்கோவில் தேரடி முன்பும் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் அதிமுக வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கலந்து கொண்டவர்கள் நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *