டெல்லி செப், 4
ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
மேலும் உடல் உறுப்பு தானம் என்பது பல உயிர்களை வாழ வைக்கும் ஒரு ஒரு சிறந்த மனித பண்பாகும். எனவே இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார்