திருவனந்தபுரம் செப், 3
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன.
இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொள்கிறார்கள். மேலும், பிற தென் மாநில முதலமைச்சர்களான பினராயி விஜயன் (கேரளா), பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோரும், மூத்த அமைச்சர்களும், தலைமைச்செயலாளர்களும், முதன்மைச் செயலாளர்களும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.